தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் விண்ணப்பிக்கும் கால வரம்பு தளர்வு – அரசாணை வெளியீடு!

October 24, 2026 2:01 PM
Tamilnadu Government Employees

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் விண்ணப்பிக்கும் கால வரம்பு தளர்வு – அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு
2026

நிதி (கொள்முதல் பிரிவு) த்துறை
அரசாணை (நிலை) எண்.220, நாள். 15.10.2026.
(புரட்டாசி-28, திருவள்ளுவராண்டு-2057)

சுருக்கம்

மாநில அரசு வழங்கும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் – அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணத்திற்கான முன்பணங்கள் -திருமண முன்பணம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால வரம்பில் தளர்வு – திருத்தம் ஆணை – வெளியிடப்படுகிறது.

படிக்கப்பட்டவை:-

அரசாணை (நிலை) எண்.148, நிதி (கொள்முதல் பிரிவு) த்துறை, நாள்: 27.06.2025.

ஆணை:

மேலே படிக்கப்பட்ட அரசாணையில், அனைத்து அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு (மகன்கள் / மகள்களுக்கு) வழங்கப்படும் திருமணத்திற்கான முன்பணத் தொகை பலமடங்கு உயர்த்தி ரூ.5,00,000/- ஆக வழங்குவதற்கு ஆணையிடப்பட்டது.

2. பார்வையில் காணும் அரசாணையின் பிற்சேர்க்கையில், அரசுப் பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திருமண முன்பணம் வழங்குவதற்கான விதிகளில், வரிசை எண்.4-(ஆ)வில் திருமணம் நடைபெறவிருக்கும் நாளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், திருமண முன்பணத்திற்கான விண்ணப்பத்தை பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு அமைச்சர் (நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை) அவர்கள் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நிதித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் ஒன்று பின்வருமாறு:-

“தற்போது, அரசு ஊழியர்கள், திருமணத் தேதிக்கு 180 நாட்களுக்கு முன்பு வரை மட்டுமே திருமண முன்பணத்திற்கு விண்ணப்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முன்பணத்தைப் பெற முடியாத தகுதியுள்ள ஊழியர்களுக்கு பயன்பெறும் வகையில், திருமணமான நாளிலிருந்து 60 நாட்கள் வரை விண்ணப்பங்களை அனுமதிக்க, தற்போதுள்ள விதிமுறை திருத்தப்படும். இந்த புதிய நடைமுறை, ஊழியர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதுடன், நடைமுறை தாமதங்கள் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தகுதியுள்ள ஊழியர்கள் இந்தப் பயனை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும்.”

4.மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில், பார்வையில் காணும் அரசாணையின் பிற்சேர்க்கையில், அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் வழங்குவதற்கான திருத்தியமைக்கப்பட்ட விதிகளில், வரிசை எண்.4-(ஆ)வில் திருமணம் நடைபெறவிருக்கும் நாளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், திருமண முன்பணத்திற்கான விண்ணப்பத்தை பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள கால வரம்பை கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து அரசு ஆணையிடுகிறது:

“அரசு ஊழியர்கள் திருமண தேதிக்கு 180 நாட்கள் முன்பிருந்தும், திருமணமான நாளிலிருந்து 60 நாட்கள் வரையும் திருமண முன்பணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.”

5. பார்வையில் காணும் அரசாணையுடன் இணைக்கப்பட்ட பிற்சேர்க்கையில் உள்ள திருமண முன்பணம் குறித்த தற்போதுள்ள விதிகளில், வரிசை எண்.4-(ஆ)விற்கு, மேலே பத்தி-4இல் ஆணையிட்டுள்ளவாறு திருமண முன்பணம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால வரம்பு பொருந்தும். இந்த கால வரம்பு தளர்வு, இவ்வரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து நடைபெறவிருக்கும் திருமணங்களுக்கு பொருந்தும்.

6. இது தொடர்பாக, தமிழ்நாடு நிதிவிதித் தொகுப்பில் தேவையான திருத்தம் தனியே வெளியிடப்படும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

வி.அருண் ராய்
அரசுச் செயலாளர் (செலவினம்)

பெறுநர்:

அனைத்து அரசுச் செயலாளர்கள், சென்னை-600 009.
அனைத்து தலைமைச் செயலகத் துறைகள் (அ.ந.மு/பட்டியல்), சென்னை-600 009.
செயலாளர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-600 009.
ஆளுநரின் செயலாளர், சென்னை-600 022.
கணக்காயர், ஆளுநர் மாளிகை, லோக் பவன், சென்னை-600 022.
ஆளுநரின் செயலகம், லோக் பவன், கிண்டி, சென்னை-600 022.
அனைத்து தலைமைச் செயலகத் துறைகள், சென்னை-600 009.
அனைத்து துறைகளின் தலைவர்கள்.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் / அனைத்து மாவட்ட நீதிபதிகள் / அனைத்து தலைமை நீதித்துறை நடுவர்கள்.
கணக்காய்வுத் தலைவர் (கணக்குகள் & உரிமைத் தொகை), சென்னை-600 018.
கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I), சென்னை-600 018.
கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-II), சென்னை-600 018.
கணக்காய்வுத் தலைவர் (CAB) சென்னை-600 009 / மதுரை.
இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத் துறை, சென்னை-600 035.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள்.
அனைத்து சம்பளக் கணக்கு அலுவலர்கள்.
அனைத்து கருவூல அலுவலர்கள் / சார்நிலைக் கருவூல அலுவலர்கள்.
இயக்குநர், மாநில அரசு தணிக்கைத் துறை, சென்னை-600 002.
தலைவர் / செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-600 003.
பதிவாளர், சென்னை உயர் நீதிமன்றம், சென்னை-600 104 / சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மதுரை.
அனைத்து ஆணையர்கள், ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் அலுவலகம்.
அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள்.
ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003.
அனைத்து மாநகராட்சிகளின் ஆணையர்கள்.

நகல் பெறுநர்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் / செயலாளர்-1, சென்னை-600 009.
முதலமைச்சரின் அலுவலகம், சென்னை-600 009.
அரசு தலைமைச் செயலாளரின் முதுநிலை முதன்மை தனிச் செயலர், சென்னை-600 009.
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை-600 009.
அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளரின் முதுநிலை முதன்மை தனிச் செயலர், நிதித்துறை, சென்னை-600 009.
நிதித்துறையின் அனைத்து அலுவலர்கள், சென்னை-600 009.
நிதித்துறையின் அனைத்துப் பிரிவுகள், சென்னை-600 009.
அங்கீகாரம் பெற்ற அனைத்து சங்கங்கள்.
இருப்புக் கோப்பு / உபரி நகல்கள்.

// ஆணைப்படி அனுப்பப்படுகிறது //

Sathya

Sathya covers the latest updates, salary calculators, and analysis related to the Eighth Central Pay Commission. He focuses on simplifying complex pay, pension, and allowance topics for Central Government employees and pensioners.

Join Telegram

Join Now

Leave a Comment